வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கணிசமாக குறைவு

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கணிசமாக குறைவு
தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததை அடுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.50 க்கு விற்பனையானது.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது மாவட்டத்தின் பண பயிர்களில் முக்கிய பொருளாக தக்காளி விளைவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தினசரி விளைவிக்கப்படும் தக்காளிகளை மாவட்டத்தின் தேவைக்கு போக மற்றவை வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி என்பது ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரத்து மீண்டும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி இன்றைய உழவர் சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கும் வெளிமார்க்கெட்டுகளில் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story