தர்மபுரியில் தக்காளி விலை சரிவு

தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்து கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பொழிந்த கனமழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் உழவர் சந்தையில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி 80 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது, வெளிமார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மழை அளவு குறைந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தர்மபுரி உழவர் சந்தையில் இன்று ஜூன் 30 காலை 6 மணி நிலவரப்படி 1 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story