புட்டிரெட்டிப்பட்டியில் தக்காளி விலை சரிவு

புட்டிரெட்டிப்பட்டி தக்காளி மார்க்கெட்டில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்தது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தினமும் தக்காளி, காய்கறி மார்க்கெட் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் தக்காளியில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் தற்காலிக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தக்காளி 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி 600 வரை விற்பனையானது. இன்றைய சந்தை யில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 250 வரை விலை குறைந்து விற்பனையானது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story