தர்மபுரியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
தக்காளி விலை சரிவு
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 7000 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தர்மபுரி பாப்பாரப்பட்டி பாலக்கோடு மாரண்டஅள்ளி காரிமங்கலம் இருமத்தூர் கம்பைநல்லூர் அதகப்பாடி மொரப்பூர் நல்லம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தக்காளிகள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாலக்கோடு தர்மபுரி கம்பைநல்லூர் சந்தைகளுக்கு சராசரியாக 100 டன் தக்காளிகள் விற்பனைக்கு வரப்படுகிறது கேரளா பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால் உழவர் சந்தையில் கிலோ 8 ரூபாய் முதல் 10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் கிலோ 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார உற்பத்தி விலை கூட கிடைக்காததால் கவலை தெரிவித்தனர் மேலும் தக்காளியை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர்.