வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தக்காளி சாகுபடி பாதிப்பு, உழவர் சந்தைக்கு வரத்து சரிவால் தக்காளி விலை உயர்ந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன இந்த ஐந்து உழவர் சந்தைகளுக்கும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளை விற்பனை செய்து வருகின்றனர் இந்த சூழலில் கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொழிந்த கனமழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்துள்ளது.

மாவட்டத்தின் முக்கிய பயிர்களில் ஒன்றாக தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வரத்து சரிந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது கடந்த சில மாதங்களாக பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரையில் விற்பனையான தக்காளியின் விலை இன்றைய உழவர் சந்தையில் ஒரு கிலோ 38 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது விளைச்சல் பாதிப்பால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story