கோடை மழையால் தக்காளி விலை உயர்வு

கோடை மழையால் தக்காளி விலை உயர்வு

பல்லடத்தில் கோடை மழையால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

பல்லடத்தில் கோடை மழையால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

பல்லடத்தில் கோடை மழையால் தக்காளி விலை உயர்வு! பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தை போலவே இந்த ஆண்டும் கோடைகாலத்தில் தக்காளி விளைச்சலால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு விலை உயர் வில்லை ஒரு பெட்டி 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரு வாரமாக பல்லடம் மற்றும் சுட்ட வட்டார பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி அழுகல் அதிகரித்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு பெட்டி 100 ரூபாயிலிருந்து ரூ. 350 க்கு விற்பனையானது. வெளியூரிலிருந்து வரும் முதல் ரக தக்காளி 500 ரூபாய்க்கு விலை போகிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று தக்காளியை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story