உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.8-க்கு விற்பனை
தக்காளி விற்பனை
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர் உள்பட 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் உழவர் சந்தைகளில் நேற்று பீன்ஸ் கிலோ ரூ.65-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.35-க்கும், கேரட் ரூ.85-க்கும், சின்ன வெங்காயம் ரூ.28-க்கும், பெரிய வெங்காயம் ரூ.38-க் கும், மிளகாய் ரூ.45-க்கும், பாகற்காய் ரூ.38-க்கும், அவரை ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, உழவர் சந்தைகள் மற்றும் வெளி மார்க்கெட்டுகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றனர்.