நாளை புனித கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம்
கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோனியார் ஆலய சார்பில் புனித கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம் நாளை துவக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். அதை நினைவுகூறும் வகை யில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பாதை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளியன்று இயேசுவின் சிலுவைபாடுகளின் 14 நிகழ்வுகளை சிலுவை சுமந்து தியானித்து அருகில் உள்ள புனித கருணை மாதா மலை தியான மையத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி 44- வது ஆண்டு புனித கருணை மாதாமலை திருச்சிலுவை திருப்பயண நிகழ்ச்சி நாளை புனித வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது.
ஆலய வளாகத்தில் நாளை காலை-7 மணிக்கு பிலாத்து மன்னன் அரச வையில் தீர்ப்பிடும் நிகழ்வுடன் துவங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து அருகில் உள்ள புனித சவேரியார் ஆலயம், கருங்கல் பேருந்து நிலையம், நிர்மலா ரோடு திருப்பு, நிர் மலா மருத்துவமனை, சிந் தன்விளை, புனித கருணை மாதா மலை குருசடி வழி யாகசென்று மலை உச்சியில் ஆலயத்திற்கு சொந்தமான தியான மையத்தில் சிலுவை யில் அறைந்து கொல்லப் பட்ட இயேசுவின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வு டன் மதியம் ஒரு மணிக்கு நிறைவடையும்.
இயேசு சிலுவையில் பாடுபட்ட 14 நிகழ்வுகளை யும் சிலுவை சுமந்து தத்ரூப மாக நடித்து தியானித்து ஊர்வலம் செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜாதி, மத பேத மில்லாமலும் நேர்ச்சையாக வும், வேண்டுதல்களுடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.