பயன்படுத்தப்படாமல் வீணாகும் தொன்னாடு முருங்கை பண்ணை
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் தொன்னாட்டில் துவக்கப்பட்ட முருங்கை நாற்றங்கால் பண்ணை, பயன்படுத்தப்படாமல் அப்படியே வீணாக உள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் தொன்னாட்டில் துவக்கப்பட்ட முருங்கை நாற்றங்கால் பண்ணை, பயன்படுத்தப்படாமல் அப்படியே வீணாக உள்ளது.
சித்தாமூர் அருகே உள்ள தொன்னாடு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில். விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஏழு மாதங்களுக்கு முன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில், முருங்கை நாற்றங்கால் பண்ணை கூடாரம், 5.37 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை முருங்கை நாற்று உற்பத்தி பணி துவங்கவில்லை. பண்ணையில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் நிழல் வலை கூடாரம், பராமரிப்பின்றி கிழிந்து காற்றில் பறக்கிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழல்வலை கூடாரத்தை சீரமைத்து, பண்ணையில் முருங்கை நாற்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள எதிர்பார்க்கின்றனர்.
Tags
Next Story