டன் கணக்கில் விற்பனைக்கு வந்த புளி
புளி விற்பனை
திண்டுக்கல் நாகல்நகரில் டன் கணக்கில் புளியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சாணார்பட்டி, தவசிமடை, கோணப்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கொசவப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நாகல் நகரில் புளி விற்பனையை நேற்று தொடங்கினர்.விதையுடன் கூடிய புளி, விதை நீக்கியது என இருவகையாகப் தரம் பிரிக்கப்பட்ட புளி டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விதை நீக்கப்பட்ட புளி கிலோ ரூ.100முதல் ரூ.120 வரையிலும், விதையுடன் கூடிய புளி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது
Next Story