மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, ரஹ்மானியா தனியார் பள்ளி மாணவி காவிய ஜனனி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -ரஹ்மானியா தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனி 10 -ம் பொதுத் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலம், கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கமுதி அருகே பேரையூர் என்ற கிராமத்தை சேர்ந்த மாணவி காவியஜனனியின் தந்தை தர்மராஜ் கூலித் தொழிலாளியாவார். தாயார் பெயர் வசந்தி கமுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்த மாணவி காவிய ஜனனி தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படித்து வந்ததாகவும், இரவு 10 மணி வரை தான் படிப்பேன் என்று கூறினார். தனது படிப்பிற்கு பள்ளி நிர்வாக குழுவினர் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர் என்று கூறினார். மேலும் கலெக்டர் ஆவது தனது லட்சியம் என்று கூறினார்.

முதலிடம் பிடித்த மாணவி காவிய ஜனனிக்கு கல்விச் சங்கத்தின் தலைவர் ஹாஜிஅப்துல்லா, பள்ளியின் தாளாளர் ஆயிஷாபீவி, நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், பள்ளி தலைமையாசிரியர் பாதுஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் கேக் ஊட்டி வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story