நூற்றாண்டு மரத்தை சாய்த்தது சூறாவளி மழை
சூறாவளியால் சாய்ந்த மரம்
புதுக்கோட்டை மாவட்டம்,கும்மங்குடியில் நூறு ஆண்டு பழமையான மரம் சூறாவளி காற்றால் சாய்ந்தது.
புதுகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருமயம் ஒன்றியம்,கும்மங்குடியில் குடிநீர் ஊரணி அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தின் அடிப்பகுதி பூச்சிகளால் துளையிடப்பட்டு வலுவின்றி காணப் பட்ட நிலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் கிராம மக்களால் மரம் வெட்டி அகற்றப்பட்டது. மரம் சாய்ந்ததால் ஊரணி கரையில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.
Next Story