நீலகிரி : கொட்டித் தீர்ககும் பருவ மழை - ஒரேநாளில் 79 செ.மீ பதிவு!
நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் தாெரப்பள்ளியை அடுத்த இறுவயல் பகுதியில் பாயும் ஆற்று நீரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், இறுவயல் கிராமம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்தது. இறுவயல் கிராமத்தில் வசிக்கும் 16 குடும்பத்தினரும் வீடுகளகில் சிக்கிக்கொண்டனர்.
விடிந்தும் வெள்ளநீர் வீடுகளிலிருந்து வடியாததால் தன்னார்வலர்கள் வீடுகளில் இருந்தவர்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் தொரப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்கைவக்கப்பட்டுள்ளனர். இதே போல முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மழையால் ஏற்பட்டுள்ள மாயாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தெப்பக்காடு வழியாக வாகனங்களில் பயணம் செய்ய வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.