பாபநாசம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம்

பாபநாசம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் பருவமழை தொடங்குவதை யொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார், துணைத் தலைவர் பூபதி ராஜா முன்னிலை வகித்தார்.

பாபநாசம் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பாபநாசம் பேரூராட்சிக்கட்பட்ட 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த பேரூராட்சி சாலைகளை செப்பணிட்டு மேம்படுத்தினர்,சாலை ஓரங்களில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகளை சேகரித்து மக்கு,மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாகனம் மூலம் உரக்கிடங்கிற்கு அனுப்பும் பணி மேற்கொண்டனர்.தொடர்ந்து 15 வார்டுகளிலும் கழிவு நீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு தூய்மை செய்து மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரிநேசன் கலந்த தூய குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் கைத்தெளிப்பான் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியும், வாகனம் மூலம் புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. பாபநாசம் பேரூராட்சிக்குப்பட்ட மக்கள் கூடும் பொது இடங்களில் சுண்ணாம்பு நீர் தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தக்க ஆலோசனைகளை வழங்கினார்

Tags

Next Story