ஆண்டிபாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் - ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கினை ஏற்றுதிருப்பூர் மக்களின் நன்மை கருதி திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ்(சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்று திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் அமையும். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார், குணசேகரன்,உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், பாலசுப்பிரமணியம், மேலாளர் ,ஹோட்டல் தமிழ்நாடு , திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு தலைவர் பூபதி, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story