சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு
சுற்றுலா வாகன உரிமையாளர்கள்
தமிழக அரசின் போக்குவரத்து துறை சுற்றுலா வாகனங்களுக்கு காலாண்டு இருந்த வரி விதிப்பை ஆயுட்கால வரி விதிப்பாக மாற்றி உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஒட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர் .பல லட்ச ரூபாய் மொத்தமாக கட்ட வேண்டியுள்ளதால் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சுற்றுலா வாகனத்திற்கு ஆயுட்கால வரிவிதிப்பு கட்டாத நிலையில் அபராதம் விதிக்கப்படுகிறது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கான தகுதி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது .இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு இந்த வரி விதிப்பை மற்றும் அபராத தொகை விதிப்பதை திரும்ப பெற வேண்டும் வரி விதிப்பை தொழிற்சங்கங்களுடன் பேசி முறை படுத்த வேண்டும். மேலும் வாகனங்களுக்குரிய பல்வேறு சான்றுகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு போக்குவரத்து துறை உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை திரட்டி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.