சுற்றுலா தலங்கள் பார்வை நேரம் மாற்றம்
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தேர்தல் தினத்தன்று பார்வை நேரம் மாற்றம் என வனத்துறை அறிவித்துள்ளது.
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தேர்தல் தினத்தன்று பார்வை நேரம் மாற்றம் என வனத்துறை அறிவித்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது,இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன,இந்த சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிப்பது வழக்கம்,இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் நேரம் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அன்றைய தினம் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 1 நாள் மட்டும் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Next Story