சுற்றுலா பேருந்து விபத்து: ஓட்டுனர் உரிமம் ரத்து
சிகிச்சை பெறும் நபர்
கார் விபத்துக்கு காரணமான ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் ரத்து செய்தனர்.
குன்னூர் மலைபாதையில் உள்ள 9வது கொண்டை ஊசி வளைவில் கடந்த மாதம் 30-ந்தேதி தனியார் சுற்றுலா பேருந்து விபத்துக்கு காரணமான ஓட்டுனர் முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமைத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்து நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் ஓட்டுனர் முத்துக்குட்டி கவன குறைவாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது. அதனையடுத்து முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமத்தை 2033-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ரத்து செய்யபடுவதாக நீலகிரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
Next Story