ஏற்காட்டில் ரங்கராட்டினத்தில் தவறி விழுந்து சுற்றுலா பயணி உயிரிழப்பு.

ஏற்காட்டில் ரங்கராட்டினத்தில் தவறி விழுந்து சுற்றுலா பயணி உயிரிழந்தார்.

ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த தனியார் (முத்தூட் ஹோம் லோன்) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் சேர்வராயன் கோவில் வளாகத்தில் உள்ள ராட்சத ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

கோயம்பத்தூரில் இயங்கும் தனியார் வங்கி ஊழியர்கள் 52 பேர் இன்று காலை ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றாபார்த்துவிட்டு ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா இடமான சேர்வராயன் குகை கோயிலுக்கு சென்றுள்ளனர்

அங்கு அமைந்துள்ள ரங்க ராட்டினத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொகுலகிருஷ்ணன் வயது 23 அவருடன் அமர்ந்திருந்த மாரியப்பன் வயது 35 ஆகிய இருவரும் ராட்டினம் சுற்றும் போது தவறி விழுந்தனர். இதில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரையும் மாரியப்பனையும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர் கோகுலலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காயமடைந்த மாரியப்பன் என்பவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏ

ற்காடு சுற்றுலா வந்து ராட்டினத்தில் தவறி விழுந்து ஒருவர் மரணமடைந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story