கன்னியாகுமரி லாட்ஜில் சுற்றுலா பயணி தூக்கிட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுற்றுலா பயணி வருவர் அறை எடுத்து தங்கி இருந்தார். இன்று காலை அவர் அறையை காலி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் தங்கி இருந்த அறைகதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அங்கு சென்று அறை கதவை தட்டி பார்த்தனர். அப்போது எந்தவித சத்தம் கேட்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அந்த நபர் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் லாட்ஜில் கொடுத்த ஆவணத்தின் படி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுனில் குமார் (58) என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த நபர் தற்கொலை செய்யும் நோக்கத்துக்கு வந்தாரா? அல்லது கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் ஏதேனும் பிரச்சனை நடந்ததா? என்பது குறித்தும், அவரது குடும்பத்தினர் எங்கு உள்ளனர்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story