காட்பாடி அருகே சுற்றுலா தளம்: 55 சதவீத பணிகள் நிறைவு

காட்பாடி அருகே சுற்றுலா தளம்: 55 சதவீத பணிகள் நிறைவு

அமைச்சர் ஆய்வு 

காட்பாடி அருகே சுற்றுலா தளம்.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாக, ஏரிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இரட்டை ஏரியான தாரப்படவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை,வேலூர் மாவட்டத்தின் மக்களுக்காக பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், ரூ.28.45 கோடி மதிப்பீட்டில் படகு சவாரி. பறவைகள்அமர்வதற்கான தீவு திட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை இன்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 55 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காட்பாடியில் உள்ள இரட்டை ஏரியான தாரப்படவேடு ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரிகளை, புனர் அமைக்கப்பட்டு சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, தற்பொழுது 55% பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும்.

காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி இணைக்கும் மேம்பால பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறினார். காட்பாடி ரயில்வே கூடுதல் மேம்பால பணிகள் எப்பொழுது துவங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு விரைவில் அந்தப் பணிகளும் துவங்கப்படும் என கூறினார்.

Tags

Next Story