குமரியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி

குமரியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம் ஏற்படும் என்ற எச்சரிக்கையை கடந்த 5-ம் தேதி வானிலை மையம் அறிவித்ததின் அடுத்த நாள், தேங்காபட்டணம் கடலில் 7 வயது சிறுமி மாயமானார். அதே நாளில் கோடிமுனை பகுதியில் சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த 2- பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்த நாள் ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் குமரிக்கு சுற்றுலா வந்த 5-பயிற்சி டாக்டர்கள் லெமூர் கடலில் மூழ்கி மரணம் அடைந்த நிலையில், கன்னியாகுமரி கடற்கரை பகுதி மட்டும் அல்லாது குமரி மாவட்டம் முழுவதும் கடற்கரை பகுதிக்கு எவரும் செல்லாமல் தடுக்கும் நிலை நேற்று வரை தொடர்ந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரை மற்றும், கடலில் புனித நீராடும் பகுதிகளில் சுற்றுலா காவலர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் இன்று (மே-11)ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா காவலர்களுடன், காவல்துறையினரும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் கண் காணிப்பை இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story