திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில்வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில்வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த தடையை 5 வது நாளான திற்பரப்பு டவுன் பஞ்., நிர்வாகத்தினர் விலக்கினர். சுற்றுலா பயணிகள் வருகை சுமாராக தான் இருந்தது.மழையின் தாக்கம் குறைந்தாலும், அதிகாலை முதல் மலையோரபகுதிகளில் தொட ர்ந்து மழை பெய்தது.பகல் வேளைகளில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட் டது. அடிக்கடி வானம் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான சூழலுடன் காணப்பட்டது.சுற்றுலா தங்கள் விருப்பம் போல் சில்லென கொட்டும் அருவியில் மகிழ்ந்தனர்.
Next Story