வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது சுற்றுலா பயணிகள் குறிக்க மீண்டும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மழையின் தாக்கம் குறைந்தது. மலையோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் அணைகளில் நீர்வரத்தும் குறைந்தது.கடந்த 3 நாட்களாக பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது மாவட்டம் முழுவதும் பெய்து வந்த மழை ஓய்ந்த நிலையில் மலையோர பகுதிகளிலும் மழை குறைந்தது.இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.

கோதை ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க மூன்று நாட்களாக நீட்டிக்கப்பட்டு வந்த தடை இன்று முதல் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story