திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
திற்பரப்பு அருவி
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Tags

Next Story