தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்க 30வது நாளாக தடை!!

தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்க 30வது நாளாக தடை!!

waterfalls

கனமழையால் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாத இருந்த நிலையில் அருவியில் சற்று நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விட்டு விட்டு பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மீண்டும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 30,வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அறிவித்துள்ளனர்.

Tags

Next Story