கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
கோவை குற்றாலம் (பைல் படம் )
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்து நுழைவாயில் முன் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவை மாவட்ட வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.மேலும் கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்துள்ள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story