அரசு அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அரசு அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலுக்கு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் அரசு அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் பயணிகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சி பகுதியாகவும் விளங்குகிறது. இயற்கையை கொஞ்சும் பகுதியாக இருப்பதால் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த அறிவிப்பை கேட்டு கொடைக்கானல் பெண் பயணிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
Next Story