பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை

பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.


கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர், இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது, இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி இந்த பகுதிக்கு சென்று வருகின்றனர், குறிப்பாக மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பேரிஜம் ஏரி,மதி கெட்டான் சோலை,தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன, இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பேரிஜம் ஏரியில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்தனர்,இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே இந்த பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல தடை தொடர்வதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பேரிஜம் ஏரியை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரிஜம் ஏரியில் காட்டு தீ ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது, இது குறித்து சம்பந்தப்பட்ட வனச்சரகர் செந்திலை தொடர்புகொள்ளும் போது அவர் செல்போன் இணைப்பை எடுக்காமலும்,வனத்துறையில் இருந்து முறையான தகவல் இல்லாமலும் உள்ளது, மேலும் பேரிஜம் ஏரியில் வேறு ஏதேனும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா எனவும் மர்மமாக இருப்பதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர், இதனை மாவட்ட வன அலுவலர் கவனம் செலுத்தி விரைவில் பேரிஜம் ஏரியை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story