குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்

சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.


சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கி விடும். இந்த காலத்தில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளின் தண்ணீர் ஏற்பட்டு அவ்வப்போது சாரல் மழை பொழிந்து குளுகுளு நிலைமை நீடித்து சுற்றுலாப் பயணி களைக் கவர்ந்திழுக்கும். இதனால் குற்றால சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் இறுதியிலேயே குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளி லும் தண்ணீர் விழ தொடங்கியது.

தொடர்ந்து சாரல் மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் வரத்தை இன்றும் நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் குற்றாலம் மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழை தான். இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி,பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர் .

Tags

Read MoreRead Less
Next Story