360 டிகிரி செல்ஃபி பாயிண்டில் வீடியோ எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்

360 டிகிரி செல்ஃபி பாயிண்டில் வீடியோ எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்

360 டிகிரி செல்ஃபி பாயிண்டில் வீடியோ எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 61-வது மலர் கண்காட்சியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 360 டிகிரி செல்ஃபி பாயிண்டில் மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் மைய பகுதியில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது, இந்த பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி 5வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பூங்கா நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பூக்களால் ஆன மயில்,சேவல்,வீடு, பொம்மை, 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட் உள்ளிட்ட உருவங்களை கொய் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக கூடை போன்ற வடிவமைப்பில் பூக்களால் பின் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய முறையை பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது, இதனையடுத்து இந்த 360 டிகிரி செல்ஃபி பாயிண்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்,

மேலும் கடந்த 4 நாட்களில் மட்டும் 19,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது, இந்த வருகையானது கடந்த வருடத்தில் வருகை புரிந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் பாதிக்கு பாதியாக குறைந்து இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story