கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோவை குற்றாலம்
ஆங்கில புத்தாண்டு மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோவை குற்றாலத்தில் காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டு ஐந்து மணிக்கு பொதுமக்கள் நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து வெளியேற்றபடுவது வழக்கமான ஒன்று. நேற்று வெளியூர் பயணிகள்,குழந்தைகள் மற்றும் ஐயப்பா பக்தர்கள் என ஏராளமானோர் கோவை குற்றாலம் வருகை புரிந்ததால் நீர்வீழ்ச்சியில் கூட்டம் அலைமோதியது.மேலும் அங்கு ரம்மியயமான சூழல் நிலவியதால் நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தனியார் வாகனங்கள் சோதனைச்சாவடி அருகே நிறுத்தபட்டு வனத்துறை வாகனம் மூலம் அழைத்து செல்லபட்டு நீர்வீழ்ச்சி உள்ள இடத்தின் ஒரு கி.மீ சுற்றுலா பயணிகள் இறக்கிவிடபட்டனர். அங்கிருந்து நடந்து சென்ற பயணிகள் நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர்.கூட்டம் அதிகமான காரணமாக சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனம் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் மூலமும் அழைத்து செல்லபட்டனர்.
Next Story