விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தேர்தல் தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதி அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு தினந்தோறும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களும் சுற்றுலாப் பணிகள் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் தேர்தல் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர்.

அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தபடியும் ,முதலைப்பண்ணை தொங்கும் பாலம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். பின்பு மீன் அசைவ உணவுகளை சமைத்து உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ந்தனர் பல நாட்களுக்குப் பிறகு நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஆலம்பாடி,மணல் திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story