ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கூட்டம் களைகட்டியது.
தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் கோடை விடுமுறை என்பதால் அண்டை மாநிலமான கர்நாடகா,கேரளா,ஆந்திரா, மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்ததால் ஒகேனக்கலை கலைக்கட்டியது. பார்க்கும் இடமெல்லாம் மனித தலைகளாக காட்சி அளித்தன.மேலும் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி,ஐந்தறிவி,சினி ஃபால்ஸ் ஆகிய இடங்களில் ஆயில் மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி செய்தனர் பின்னர் ஒகேனக்கல்லில் பிரசித்தி பெற்ற மீன் உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story