ஈஸ்டர் விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஈஸ்டர் விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்
கன்னியாகுமரி படகுத்துறையில் இன்று குவிந்த பயணிகள்
ஈஸ்டர் விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். தற்போது ஏப்ரல், மே மதங்கள் கோடை விடுமுறை சீசன் காலங்களாகும். இந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பது வழக்கம். இதற்கு இடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் அதிக அளவில் வந்த வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் கடந்த 3 தினங்களாக புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இதில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாக காட்சியை காண ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து சூரியன் உதயமான காட்சியை ரசித்தனர்.

அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையிலிருந்து ஏராளமான பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், தூய அலங்கார உபகாரமாதா திருத்தலம் போன்ற வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்திற்காகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை காலை 8 மணி முதல் இருந்து நீண்ட வரிசையில் படகு துறையில் பயணிகள் காத்திருந்தனர். கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரையோர பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அதிக அளவில் வாகனங்கள் கன்னியாகுமரி பகுதியில் குவிந்ததால் காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags

Next Story