வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேடந்தாங்கல் 

காணும் பொங்கலையொட்டி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்த ஆயிரக்கணக்காக பொதுமக்கள் பலவேறு இன பறவைகளை பார்த்து ரசித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ,பர்மா, இந்தோனேஷியா, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இறைக்காகவும் இனப் பெருக்கத்திற்காகவும் அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி நாரை, வர்ண நாரை, பாம்பு தாரா, கூழைக்கடாய், நாமக்கோழி, நீர் வாத்து, உள்ளிட்ட பல வகையான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம் இந்த நிலையில் கலந்து சில மாதங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பொய்ததால் வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது சுமார் 30 - ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளது. இந்த சூழலில் தொடர் விடுமுறை காரணமாகவும், காணும் பொங்கலை முன்னிட்டும் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரம் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கையுடன் கூடிய பறவைகளை குடும்பத்துடன் ரசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, காவல்துறை சார்பில் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து உள்ளனர்.

Tags

Next Story