காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பல்லவ மன்னா்கள் கால சிற்பங்களை பாா்த்து புகைப்படங்கள் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா்.


காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பல்லவ மன்னா்கள் கால சிற்பங்களை பாா்த்து புகைப்படங்கள் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா்.

தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். சென்னை புகா், காஞ்சிபுரம் , தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூா், திருப்போரூா், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணககான சுற்றுலாப் பயணிகள், நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அா்சு’ன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கலங்கரைவிளக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்லவ மன்னா்கள் கால சிற்பங்களை பாா்த்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா்.

கடல்சீற்றம் அதிகரித்த காரணத்தால் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. காவல் துறை அறிவுறுத்தலின் பேரில் கடற்கரை முழுவதும், சுமாா் 1 கி மீ தொலைவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் சுற்றுலா பயணிகள் யாரையும் கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை .கடற்கரையில் கண்காணிப்பு மையங்களை அமைத்து காவல் துறையினா் ரோந்து மேற்கொண்டனா். பல்வேறு இடங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் பேருந்துகள் புறவழிச்சாலையில் மாமல்லன் சிலை அருகிலும், செங்கல்பட்டு, திருப்போரூா், கல்பாக்கம், பாண்டிச்சேரி பகுதிகளில் இருந்துவரும் பேருந்துகள் புறவழிச்சாலை அரசு மருத்துவமனை பகுதியிலும் நிறுத்தப்பட்டன.

சுற்றுலா பயணிகள் சிற்றுந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா். காா்கள் புறவழிச்சாலையிலேயே நிறுத்தப்பட்டன. மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டா்கள் மாமல்லபுரம் மங்கலபிரியா, மகேந்திரன், திருக்கழுகுன்றம் நடராஜன், கல்பாக்கம், பிரவின் டோனி , உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Tags

Next Story