ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சேலத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஏற்காட்டில் அடிக்கடி மழை பெய்வதும், குளிர்ந்த காற்று வீசுவதுமாக இருக்கிறது. அங்கு வெப்பம் தணிந்து நல்ல சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. எனவே கோடை விடுமுறைைய கழிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் ஏற்காடுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏற்காடு படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story