விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்களில் இன்று பொதுமக்களின் உயர்ந்து காணப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாவாரியில் வார இறுதி விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரிய உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், செங்குத்துறை கடற்கரை, பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் திரண்டு காணப்பட்டனர்.

சூரிய உதய உதயம் இன்று தெளிவாகத் தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகுகளில் சென்று பார்வையிடுவதற்கும் படகு துறையில் பயணிகள் அதிக நேரம் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. இதனால் படகுத் துறையில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தற்போது கோடையின் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து முக்கடல் சங்கத்தில் ஆனந்த குளியல் இட்டனர். தற்போது கன்னியாகு கடற்கரை பகுதியில் இரவு 9 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.

Tags

Next Story