மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள்
பூங்காவிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக மேட்டூர் அணை பூங்கா திகழ்கிறது. இப்பூங்கா விற்கு உள்ளூர் மட்டுமின்றி தர்மபுரி, சேலம் ,நாமக்கல் ,ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம் . பூங்கா கட்டணமாக ரூ 5 வசூல் செய்யப்படுகிறது. சுற்றுளா பயணிகளை கவருவதற்காக பறவை இனங்கள், மான்பண்ணை, பாம்பு பண்ணை உள்ளிட்டவைகளும் உள்ளன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு இன்று மேட்டூர் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் காவிரியில் நீராடி விட்டு பூங்காவை சுற்றிப் பார்த்தனர். பூங்காவில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து மாலையில் வீடு திரும்பினர். சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக பூங்காவிற்கு வழக்கத்தை விட கூடுதலாக வருவாய் கிடைத்தது.
Next Story