முந்தல் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

முந்தல் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்திற்கு இணையாக பொதுமக்கள் விரும்பிச் செல்லும் முந்தல் அருவி

அருவியில் நீராடி அம்மனை வழிபட்டால் நினைத்தது ம்நடக்கும் என நம்பிக்கை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே புன்னையாபுரம் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த முந்தல் அருவி அமைந்துள்ளது. இது கிருஷ்ணாபுரம் காப்புக் காடு பகுதிக்கு உட்பட்டது. மேலும், இங்கு வார விடுமுறையையொட்டி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர், கற்பக நாச்சியார் அம்மன் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, முந்தல் அருவியில் உற்சாகத்துடன் குளித்துச் செல்கின்றனர். "இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், “இந்த கோயில் அருகே சுனை நீர் உள்ளது. இந்த புனித நீரில் நீராடி கற்பக நாச்சியார் அம்மனை வழிபட்டு வந்தால், நாம் நினைக்கின்ற காரியங்கள் கைகூடும். மேலும் அருகில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்து, ஊரில் கும்பாபிேஷகத்திற்கு தீர்த்தமாக இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்” என கூறினார்.

Tags

Next Story