விடுமுறை தினம் என்பதால் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினம் என்பதால் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குமரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால் இப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த - பின்பு தண்ணீரின் அளவு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.தற்போது அருவியிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் வரும் சுற்றுலா பயணிகளும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

Tags

Next Story