சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குணா குகை,பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


கொடைக்கானலில் குணா குகை,பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சீசன் களை கட்ட துவங்கியதை தொடர்ந்தும் மே தினமான இன்று உழைப்பாளர் தின விடுமுறையை தொடர்ந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா , ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் வருகை பிற்பகல் முதலே அதிகரித்து காணப்பட்டது, குறிப்பாக பேரிஜம் சுற்றுலா தலம் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலைகளில் காட்டு தீ தொடர்வதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான மோயர் ச‌துக்க‌ம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன்ம‌ர‌க்காடுக‌ள், பசுமை பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் மேகக்கூட்டங்களின் நடுவே தெரியும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் க‌ண்டு ரசித்தும் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் நில‌வும் இத‌மான‌ கால‌நிலையை அனுப‌வித்த‌வாறு புகைப்ப‌ட‌ம் ம‌ற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் படகு சவாரி செய்தும், பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர்களைக் கண்டு ரசித்தும், பூங்கா புல்த‌ரைக‌ளில் அம‌ர்ந்தும் ஏரிச்சாலையில் குதிரைசவாரி, நடைப்பயிற்சி செய்தும் உற்சாக‌ம‌டைந்து வருகின்றனர், மேலும் குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஒரே நேரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் சுமார் 5 கி.மீ தூரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,இதனையடுத்து சுற்றுலா தலங்களுக்குள் வாகனங்களில் காத்திருந்து ஊர்ந்தப்படி போக்குவரத்து நெரிசலை பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story