சரக்கு வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி மாவட்டம் கோயில் திருவழாவில் சரக்கு வாகனங்களை இழுத்து நூதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீசிங்காரவேலர் வள்ளி தெய்வானை ஈஸ்வரர் காலபைரவர் சுவாமிகளின் 53 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோற்சவ காவடி தேர் திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் காலை முதலே சுவாமிக்கு பாலபிஷேகம் அபிஷேக ஆராதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுவாமிக்கு மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு மஞ்சள் இடித்து தீப ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து அழகுகுத்துதல்,காவடி எடுத்தல்,மிக நீளமான வேல் அழகு குத்துதல், உரல் கல் முதுகில் அழகுகுத்தி இழுத்தல், முதுகில் அழகு குத்தி சரக்கு வாகனங்களை இது கோயில் வாசலில் இருந்து இழுத்துக் கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது இந்த தேர் வீதி உலாவில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து அவர்கள் இழுத்து சென்ற தேர்வு உப்புகளை வீசி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள் இந்த விழாவை காண சிங்காரப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளாக உள்ள புளியானூர், வெள்ளக்குட்டை நாயக்கனூர் மல்லிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்

Tags

Next Story