சாலை விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி

சாலை விபத்தில் டிராக்டர் டிரைவர் பலி

சேலத்தில் கன்டெய்னர் லாரி, டிராக்டர், காருடன் அடுத்தடுத்து மோதிய விபத்தில், டிராக்டர் டிரைவர் உயிரிழந்தார். 

சேலத்தில் கன்டெய்னர் லாரி, டிராக்டர், காருடன் அடுத்தடுத்து மோதிய விபத்தில், டிராக்டர் டிரைவர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி புறப்பட்டு வந்தது. நேற்று காலை 8 மணியளவில் அந்த லாரி சேலம் உத்தமசோழபுரம் அருகே கோவை பைபாசில் சென்றது. அப்போது, முன்னால் சென்ற டிராக்டர் மீது திடீரென லாரி மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் டிரைவரான நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த ராஜா (வயது 52) என்பவர் மீது டிராக்டர் கவிழ்ந்ததால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி அங்கு சென்று கொண்டிருந்த ஒரு கார் மீதும் மோதி நின்றது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கி பயங்கரமாக சேதமானது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், காருக்குள் சிக்கிக்கொண்ட 5 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையில், லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story