ஆய்க்குடியில் பேரூராட்சியில் டிராக்டா் சேவை தொடக்கம்

ஆய்க்குடியில் பேரூராட்சியில் டிராக்டா் சேவை தொடக்கம்
ஆய்க்குடியில் பேரூராட்சியில் டிராக்டா் சேவை தொடக்கம்
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் சுகாதார பணிக்காக டிராக்டர் பயன்பாட்டிற்கு வந்தது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில், பொதுசுகாதாரப் பணிகளுக்காக ரூ. 9.70 லட்சத்தில் வாங்கப்பட்ட டிராக்டா் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சுந்தரராஜன் கொடியசைத்து, டிராக்டா் சேவையைத் தொடக்கிவைத்தாா்.

செயல் அலுவலா் ந. சாந்தி, துணைத் தலைவா் ச. மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்ற உறுப்பினா்கள் இலக்கியா, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, ஒப்பந்ததாரா் மாயாகற்பகஇந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story