ஏரி மண் கடத்தி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்
டிராக்டர் பறிமுதல்
குண்ணத்தூர் பகுதியில் ஏரி மண் கடத்தி வந்த இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூர் பகுதியில் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அருண் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஏரியில் இருந்து ஏரி மண்ணை அள்ளிச் சென்ற 2 டிராக்டர்களை மடக்கிப் பிடித்தார்.போலீசாரை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு 2 பேரும் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, ஆரணி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
Tags
Next Story