பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம்

பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம்

 பொய்கை மாட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொய்கை மாட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் அருகே பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுசந்தை நடைபெறுகிறது. இந்தச் சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த வாரத்தை விட நேற்று கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது. காளைகள், உழவு மாடுகள், எருமைகள் மற்றும் புறாக்கள், வாத்துகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

அதே நேரத்தில் கால்நடைகளை வாங்க புங்கனூர், சித்தூர் வாணியம்பாடி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வந்திருந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொளுத்தும் வெயிலால் பொய்கை மாட்டுச்சந்தையில் கடந்த 3 வாரமாக மாடுகளின் வரத்து குறைந்தது. இந்த வாரம் கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ரூ.1 கோடியை தாண்டி விற்பனை நடந்துள்ளது. ஒரு கறவை மாட்டின் விலை ரூ.75 ஆயிரத்துக்கும் மேல் விலை போயின என்று கூறினர்.

Tags

Next Story