வருவாய் ஆய்வாளரிடம் மனு வழங்கிய தொழிற்சங்க நிர்வாகிகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி தொழிலை நம்பி பணியாற்றி வருகின்றனர்.. இந்நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20% சதம் வழங்கிட வேண்டுமென நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக பள்ளிப்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது வியாழன்று நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகி அங்கமுத்து தலைமை தாங்கினார் .
சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.. மேலும் இந்த நிகழ்வில் விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார், சங்க உதவி தலைவர் கே.குமார், பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
ஆர்ப்பாட்ட நினைவில் வருவாய் ஆய்வாளர் ஜெகதீஷ் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டு விசைத்தறி தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.. பலர் பங்கேற்றனர்..