குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்

குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்

தொழிற்சங்கம்

குமாரபாளையத்தில் நடந்த தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் 42 பெண்கள் உள்ளிட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களின் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், விவசாயிகள் கோரிக்கை அமல்படுத்த வேண்டும்,

குறைந்த பட்ச ஆதாய விலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, குறைந்த பட்ச பென்சன் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், வேலை பாதுக்காப்பை உறுதி செய்யாத முதலாளிகளுக்கு, உதவும் சலுகைகள்,

நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், அனைத்து அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுவதற்கு தேசிய சமூக பாதுக்காப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், போனஸ் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுக்கான தகுதி, மற்றும் ஊதிய வரம்புகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி

, கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியல் செய்ய முயன்ற போது, தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பெண்கள் உள்ளிட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர். நிர்வாகிகள் பாலசுப்ரமணி, பாலுசாமி, சுப்பிரமணி, கோவிந்தராஜ், முருகேசன், ஆறுமுகம், சக்திவேல், வெங்கடேசன், சித்ரா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story